50000 Graduates Training Period Extended to more 6 Months
பயிலுநர் பட்டதாரிகளின் பயிற்சிகாலத்தை மேலும் 6 மாதம் நீடிக்க நடவடிக்கை
வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்தல் திட்டம் 2020 இன் கீழ் பயிலுநர்களுக்கான பயிற்சி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன
பயிலுர் பட்டதாரிகளாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான விதிமுறைகளை மீள்பரிசீலனை செய்ப்பட்டதன் பின்னர் மீண்டும் 6 மாதங்களுக்கு பயிற்சிக்காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வெற்றிடங்கள் நிலவும் துறைகளில் முன்னுரிமை குறித்த அடையாளங்காண்பதற்காக குழுவொன்றை தெரிவு செய்வதற்கும் குழுவினால் அடையாளப்படுத்தப்பட்டமைக்கு அமைவாக மாகாணசபைகள், பிரதேசசபைகள், அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றில் அவசியத்திற்கேற்ப பதவிகளை உருவாக்கல் மற்றும் அப்பதவிகளில் பயிலுநர்களை உள்வாங்குவதற்கான திட்டமிடலுக்கும் அமைச்சரவை அனுமதி பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீடிக்கப்பட்ட காலத்திற்கமைய, 2022ம் ஆண்டு வரை கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் என்பவற்றை வழங்குவதற்கான நிதியை அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சிற்கு ஒதுக்கிக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்வியமைச்சு மற்றும் மாகாணசபைகளின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பாடங்களை அடிப்படையாக கொண்டு 18,000 பேரை பாடசாலையில் இணைப்பதற்கும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாணசபைகளின் கீழ் புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான மனித வளத்தை கவனத்திற்குகொண்டு அபிவிருத்தி அதிகாரிகள் வெற்றிடங்களுக்கு பயிலுநர் பட்டதாரிகளை உள்வாங்கவும், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் என்பவற்றில் உள்ள வெற்றிடங்களுக்கும் இப்பயிலுநர் பட்டதாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர்.
குறித்த பட்டதாரிகள் 2020 செப்டெம்பர் மற்றும் 2021 பெப்ரவரி ஆகிய மாதங்களில் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களாவர். அப்பயிலுநர் பட்டதாரிகளுக்கு 12 மாத கால பயிற்சியொன்று வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. கொவிட் பரவல் காரணமாக அவர்களுக்கான பயிற்சிகள் இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. தற்போது அவ்வாறு இணைக்கப்பட்ட 53, 177 பட்டதாரிகள் அந்தந்த மாவட்டங்களில் மாவட்டச் செயலகங்களின் கீழியங்கும் அரச நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர்.
இப்பட்டதாரி பயிலுநர்களில் 15,000 பேர் 2021ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source : 50000 Graduates Training Period Extended to more 6 Months
Graduate Trainee Online Registration Related Others Posts