College of Education Teachers List 2023 – Northern Province
கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை மாகாண அரசாங்க சேவையின் கீழ் ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல் (2018–2020) – (2023)
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாவினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெளியேறியவர்களில் மத்திய கல்வி அமைச்சினால் வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வட மாகாண கல்வி அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரங்களை இங்கு பார்வையிட முடியும்.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை தயாரிப்பதற்கு ஏதுவாக 27.05.2023 ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சில் ஆவணங்கள் சேகரிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறவூள்ளதனால் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேர ஒழுங்கிற்கமைவாக கீழ்வரும் ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
- தேசிய அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
- பிறப்புப் பதிவுச் சான்றிதழ்.
- பூரணப்படுத்தப்பட்ட தகவல் படிவம். (இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
- விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் சமர்ப்பித்தல் வேண்டும்)
மேலதிக தகவல்களுக்கு :-
திரு.சி.சுரேந்திரன் (077-5913125)
உதவிச் செயலாளர்,
கல்வி அமைச்சு,
வடக்கு மாகாணம்.
Name List | Download |
Information Form – English | Download |
Information Form – Tamil | Download |