கலைத்துறையில் டிப்ளோமா
Diploma in Arts (SLQF 3)
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்துடன் இணைந்து ஒரு வருட காலம் கலைத்துறையில் டிப்ளோமா கற்கைநெறியை வழங்கவிருக்கின்றது.
நுழைவுத் தகமைகள்
க.பொ.த. உயர்தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சித்தி பெற்றிருந்து, பல்கலைக்கழக நுழைவுத் தகைமை பெற்றிருத்தல் அல்லது அதற்குச் சமமான தகைமை பெற்றிருத்தல்.
அல்லது
குறைந்தது 12 வருடகாலப் பாடசாலைக் கல்வியுடன், SLQF மட்டம் 2 இற்குச் சமமான அடிப்படைப் பாடநெறியைப் பூர்த்திசெய்திருப்பதுடன், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கையால் நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சையில் (Aptitude test) சித்தியடைதல்.
அல்லது
NVQ மட்டம் 4 ஐ பூர்த்தி செய்திருத்தல் அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட தொழில் அனுபவம் அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட முன்கற்றலுடன் உயர்கல்வி நிறுவனத்தின் கல்வி அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அறிகைநிலை இணைப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் குறைந்தபட்சம் 30 அலகுகளை பூர்த்தி செய்திருத்தல், குறிப்பிட்ட பாடத்துறைக்கான SLQF மட்டம் 3 இற்கான அனுமதிக்கு சமனான தகைமையாக கருத்தில் கொள்ளப்படும்.
குறிப்பு: முதலாவது நுழைவுத் தகைமைப் பிரிவின் அடிப்படையில் போதுமானளவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாதவிடத்து, மட்டுமே ஏனைய இரு தகைமைப் பிரிவுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- காலம்: ஒரு வருடம் (வார இறுதி நாட்கள்)
- கற்பித்தல் மொழி: தமிழ்
- கற்பித்தல் முறை : நேரடி மற்றும் நிகழ்நிலை மூலம் நடைபெறும்.
- விண்ணப்பக் கட்டணம் : ரூபா 1,000
- பாடநெறிக் கட்டணம் : ரூபா 70,000
(இரண்டு தவணைகள் மூலம் செலுத்தலாம்)
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரிகள் கீழுள்ள நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.
பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.
அத்துடன் விண்ணப்பதாரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினையும், இதனுடன் தொடர்பான ஆவணங்களின் நிழல் பிரதி, பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்து
உதவிப்பதிவாளர்,
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம்,
இலங்கை,
இல.50, புதிய வீதி,
மட்டக்களப்பு.
எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கலைத்துறையில் டிப்ளோமா” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்.
Notice – Tamil | Download |
Instructions | Download |
Application | Apply Online |
Closing Date | 2024.01.10 |