Graduate Teaching Vacancies 2022 Tamil Instruction

Graduate Teaching Vacancies 2022 National Schools

Graduate Teaching Vacancies 2022 Tamil Instruction

Graduate Teaching Vacancies 2022 Tamil Instruction

1 பொது அறிவுரைகள்

    • 1.1. வலைத்தளத்தில் பிரவேசிப்பதற்கு முன்,இங்கு குறிப்பிப்பட்ட அறிவுரைகளை நன்கு வாசித்து புரிந்துக்கொள்ள வேண்டும்
    • 1.2. இந்த நியமனங்களை வழங்குதல் இலக்கம் 21/0658/340/013 மற்றும் 2021.04.19 ஆம் திகதியஇ இலக்கம் 21/2076/315/033-ஐ மற்றும் 2021.12.13 திகதிய அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் இலக்கம் 1885/38 மற்றும் 2014.10.23 ஆம் திகதிய இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் விதிமுறைகளுக்கமைவாக மேற்கொள்ளப்படும்
      • 1.2.1 ஆசிரிய நியமனங்களுக்காக முன்மொழியப்பட்ட தொகுதிகள் மற்றும் செயற்பாடுகள் பின்வருமாறு அமையும்
        • 1.2.1.1. பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் செயற்றிட்டம் – 2020 இன் கீழ் ஆட்சேர்ப்புச்செய்யப்பட்ட அனைத்து பட்டதாரி பயிலுனர்கள்
        • 1.2.1.2. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட “பட்டதாரி பயிலுநர்களுக்கு அரச நிறுவனங்களில் பயற்சியை வழங்குதல்) வேலைத்தி;ட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக பயற்சிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு 2020.01.01 மற்றும் 2021.01.01 ஆம் திகதி தொடக்கம் அபிவிருத்தி அலுவலர் சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற குழுவினர்
        • 1.2.1.3. பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் செயற்றிட்;டத்தின் கீழ் 2020,2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட டிப்ளோமாதாரர்கள்
      • 1.2.2. விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தொடர்பாக பொது நேர்முக்ப்பரீட்சையொன்றை நடாத்தி அவர்கள் இலக்கம் 1885ஃ38 மற்றும் 2014.10.23 ஆம் திகதிய இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் 7.2.4.4.1(1) வாசகத்திற்கமைவாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் அடிப்படை தகைமைகளை பூர்த்திசெய்துள்ளார்களா என்பதை பரீட்சித்துப்பார்க்கப்படும்
      • 1.2.3. இலங்கை ஆசிரிய சேவையின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் போது 2020 பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டத்தின்” கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பயிலுநர்களின் ,2020.01.01 ஆம் திகதிக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மற்றும் 2021.01.01 ஆம் திகதிக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வயது 2019.12.31 ஆம் திகதிக்கு 35 க்கும் குறைவாக கருதப்படும்
      • 1.2.4. இலக்கம் 1885/38 மற்றும் 2014.10.23 திகதிய இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பின் 7.2.4.4 (2) வாசகத்திற்கமைய பொது நேர்முகப்பரீட்சையில் தகைமைப் பெறும் விண்ணப்பதாரர்கள் பிரயோகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்
      • 1.2.5. இந்த பிரயோக பரீட்சை இலக்கம் 1885/38 மற்றும் 2014.10.23 ஆம் திகதிய இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக்குறிப்பிற்கமைய நடாத்தப்படும்
      • 1.2.6. ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாக நிலவும் வெற்றிடங்களுக்காக நியமனங்கள் வழங்கும்போது பிரயோகப்பரீட்வையின் புள்ளிகளின் தொடர் வரிசைப்படி நியமனங்கள் வழங்கப்படும்
      • 1.2.7. இவ்வாறு வழங்கப்படும் நியமனம் தற்காலிக நியமனம் என்பதுடன், நியமனம் பெறும் பாடசாலையில் 10 வருட சேவைக்காலத்திற்கு உட்படுத்தப்படும்
      • 1.2.8. தற்காலிக நியமனம் வழங்கப்பட்டு 3 வருடங்களுக்குள் ஆசிரிய பிரமாணக்குறிப்பின் 7.2.4.1 இன் படி எழுத்துமூல பரீட்சை ஒன்றை நடாத்தி அதில் தேர்ச்சி பெறும் உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் நிலையான நியமனங்கள் வழங்கப்படும்
      • 1.2.9. மேற்படி பரீட்சையில் தோல்வி பெறும் விண்ணப்பதாரர்கள் தொடர்பாக ஒரு வருடத்திற்குள் மீண்டும் ஒரு பரீட்சையை நடாத்துவது அல்லது அவர்கள் இதற்கு முன் வகித்த பதவியில் நியமிப்பது அல்லது பட்டதாரி பயிலுநர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்;வது அல்லது பரீட்சையில் தோல்வி பெறும் டிப்ளோமாதாரர்களின் சேவையை முடிவுக்கு கொண்டுவருதல் போன்றவற்றை மேற்கொள்ளப்படும்
      • 1.2.10. ஒவ்வொரு பாடம் தொடர்பாக தகைமை பெறும் பட்டதாரிகள் போதியளவு காணப்படாவிட்டால் மாத்திரம் டிப்ளோமாதாரர்களைக் கொண்டு வெற்றிடங்களை பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
      • 1.2.11. நிலவும் வலய அடிப்படையிலான ஆசிரிய வெற்றிடஙகளுக்காக விண்ணப்பதாரர்களை தெரிவுசெய்யும்போது ஒவ்வொரு விண்ணப்பதாரரின் கல்வித் தகைமைகளை கருத்திற்கொண்டு பாடம் சார்பாக நிலவும் வெற்றிடங்களுக்கு மாத்திரம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
      • 1.2.12. ஓவ்வொரு பாடம் தொடர்பாக விண்ணப்பிக்கும்போது அந்த பாடமானது தமது பட்டம் அல்லது டிப்ளோமா பாடத்திட்டத்தில் முக்கிய பாடமாக காணப்படுதல் கட்டாயமாகும்
    • 1.3. விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுக்கு மேலதிகமாக குறிப்பிட வேண்டிய விடயங்கள் இருப்பின் அது குறித்து Requests/Comments நிரலில் குறிப்பிடவும்
    • 1.4. அதிபர்களால் வழங்கப்படும் வெற்றிட கடிதங்கள் நிராகரிக்கப்படும்
    • 1.5. இந்த நியமனங்கள் கல்வி அமைச்சின் செயலாளரினால் உங்களுக்கு வழங்கப்படும்
    • 1.6. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தல் அல்லது வேறு காரணத்தினால் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இந்த இணையவழி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு தவறுபவர்கள் உடனடியாக Help Desk இல் உள்ள தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு தேவையான அறிவுரைகளை பெற்றுக்கொள்ளவும்
    • 1.7. விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்யும் போது சிக்கல்கள் தோன்றும் பட்சத்தில், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் நிரந்தரமாக்கும் கடிதம், தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி ஆகியவற்றை திணைக்கள தலைவர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு உங்களை தொடர்பு கொள்ள முடியுமான தொலைபேசி இலக்கத்தினையும் குறிப்பிட்டு கோரிக்கை கடிதத்தினோடு Scan செய்து அப் பிரதிகளை (Scan பிரதிகளை probgraduate2@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிய பின்னர் தயவுசெய்து எமது Help Desk இல் உள்ள தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்
    • 1.8. இந்த Scan செய்யப்பட்ட பிரதிகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பும் போது Subject இல் உங்களது பெயர் முதல்எழுத்துக்களுடன் ஆங்கிலத்தில் குறிப்பிடுவது கட்டாயமானதாகும். உதாரணம் – A.W. Nanayakkara
    • 1.9. மேலும் உரிய குழுக்கள் Help Desk இன் தொலைபேசி எண்களுடன் தொடர்பை ஏற்படுத்தும்போது ஒவ்வொரு தொலைபேசி எண்களும் வெவ்வேறு விதத்தில் இருப்பதை கருத்திற்கொண்டு அந்த தொலைபேசி எண்ணுடனேயே தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தவும்
    • 1.10. நீங்கள் மாகாண பாடசாலை ஒன்றில் கடமை புரிய விரும்பினால் அது தொடர்பாக உரிய தகவல்களை உள்ளடக்கும் இடத்திலேயே குறிப்பிடவும்
    • 1.11. மாகாண பாடசாலை ஒன்றில் கடமை புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாகாணங்களை இலக்க ஒழுங்கின் படி தெரிவு செய்வதோடு அந்த தகவல்கள் எம்மால் உரிய மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
    • 1.12. தேசிய பாடசாலைகளுக்கான போதியளவு வெற்றிடங்கள் இல்லாத பட்சத்தில், விண்ணப்பதாரர்கள் கோரும் மாகாணங்களுக்கு நியமிக்கப்படுவர்
    • 1.13. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரிக்கப்படும் இந்த அறிவித்தலில் மொழி வாசகங்களுக்கிடையில் ஏதேனும் ஒப்பீட்டின்மைகள் காணப்படும் பட்சத்தில்; சிங்கள மொழி மூலமான அறிவித்தல் சரியானதெனக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும
    • 1.14. விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித்திகதி 2022.03.15 ஆகும்

2 வெற்றிடங்களை தெரிவுசெய்வதற்கான ஆலோசனைகள்

    • 2.1. உங்களுடைய பாடத்திற்கு மற்றும் மொழிமூலத்திற்குரியவாறு முறைமையில் நிலவும் தேசிய பாடசாலைகளின் வெற்றிடங்கள் வலய அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன
    • 2.2. அந்த ஆசிரிய வெற்றிடங்களில் தாம் விரும்பும் 05 வலயங்களை நீங்கள் தெரிவு செய்யலாம்
    • 2.3. ஆசிரிய நியமனங்களை வழங்குதல் நிலையமர்த்தல் மேற்கொள்ளப்படுவது வெற்றிட எண்ணிக்கை மற்றும் பிரயோக பரீட்சை திறன் அடிப்படையில் மாத்திரம் என்பதுடன், வலயங்களுக்கான முன்னுரிமை மதிப்பெண்கள் ஆசிரிய நியமனம் பெறுவதற்கான தகுதியாக கருதப்படுவதில்லை
    • 2.4. பிரயோக பரீட்சையின் புள்ளிகளின் தொடர் வரிசைப்படி உங்களால் கோரப்படும் பாடத்திற்குரிய வெற்றிடங்கள் காணப்படாவிட்டால் வேறு பாடங்களுக்கான நியமனம் வழங்குதல், தெரிவுசெய்யப்படும் வலயங்களில் இணைத்துக்கொள்தல், தெரிவு செய்யும் வலயத்தில் வெற்றிடங்கள் காணப்படாவிட்டால் வேறு வலயங்களை வழங்குதல் அல்லது இது தொடர்பில் எழும் எந்தவொரு சிக்கல்கள் தொடர்பாகவும் இறுதி முடிவு கல்விச் செயலாளரை சார்ந்ததாகும்

3 வலைத்தளத்தை பரிசீலிப்பதற்கான பொது அறிவுரைகள்

    • 3.1. உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் (N.I.C.Number) user name பயனர்பெயர் கடவுச்சொல்லாக பயன்படுத்த வேண்டியதுடன், பதிவினை பூர்த்திசெய்வதற்காக நீங்கள் கடவுச்சொல் (password) ஒன்றை வழங்கி மீண்டும் Login ஆக வேண்டும். (Login) ஆகியவுடன் கடவுச்சொல்லை (password) மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டாது
    • 3.2. உங்களுடைய கடவுச்சொல்லை (password) நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் உள்ளடக்கப்பட்ட தகவல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இடமுண்டு
    • 3.3. விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதிநாள் வரை தகவல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இடமுண்டு
    • 3.4. விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித்தினத்திற்குப் பின்னர் செய்யப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
    • 3.5. இணையவழி விண்ணப்பப்படிவத்தில் தனிப்பட்ட தகவல்கள கல்வித்தகைமைகள் மற்றும், விருப்பமான வலயத் தேர்வு ஆகிய பகுதிகளை உங்களால் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்
    • 3.6. .ஒரு விண்ணப்பதாரருக்கு ஒருதடவை மாத்திரம் பதிவுசெய்யும் வாய்ப்புகள் உண்டு
    • 3.7. எவ்வாறாயினும், நீங்கள் 1.2.3 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளை பூர்த்தி செய்யாத பட்சத்தில் உங்களுக்கு இந்த தகவல் முறைமைகளை அணுக முடியாது

4 வலைத்தளத்தை பரிசீலிப்பதற்கான தொழில்நுட்ப அறிவுறைகள்

    • 4.1. Login செய்த பின்னர் நீங்கள் (password) ஒன்றை வழங்க வேண்டும் உங்களால் வழங்கப்படும் (pயளளறழசன) ஊடாக உங்களுக்கு நீங்கள் தெரிவுசெய்ததை திருத்த முடியும்
    • 4.2. தகவல்களை வாசித்து புரிந்து கொண்ட பின்னர் மாத்திரம் உரிய இடத்தில் (✔) என குறியிடவும்
    • 4.3. திரையில் கடவுச்சொல் வெற்றிகரமாக உள்ளடக்கப்பட்டிருப்பதை காட்சிப்படுத்தும். முன்நோக்கிச் செல்லவும். பொத்தானை Click செய்த பின்னர் நீங்கள் பதிவுசெய்த உங்களுடைய (N.I.C.Number) மற்றும் கடவுச்சொல்லை (password) மீண்டும் உ ள்ளடக்கி ( Login) ஆகவும்
    • 4.4. பின்னர் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகைமைகள் மற்றும் விரும்பும் வலயத்தினை தெரிவுசெய்யும் தகவல்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்
    • 4.5. உங்களுடைய விருப்பு தொடர்வரிசையின் அடிப்படையில் வெற்றிடங்களை பெயரிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய அறிவுரைகளை பார்க்கவும். அதன் பின்னர் தகவல்களை உள்ளடக்கவும்
    • 4.6. இது குறித்து உங்களுக்கு மேலதிக கோரிக்கைகள் இருப்பின் மெனுவில் ; requests/ comments நிரலில் குறிப்பிடவும்
    • 4.7. நீங்கள் உள்ளடக்கிய தகவல் தொடர்பான சுருக்கத்தை பரிசீலனை செய்து சிக்கல்கள் நிலவுமெனில் உதவி தொலைபேசி மெனுவில் உள்ள எமது தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்
    • 4.8. உங்களுடைய தெரிவை மீண்டும் திருத்த வேண்டுமானால் நீங்கள் இங்கு மீண்டும் தனிப்பட்ட தகவல்கள் கல்வித் தகவல்கள் மற்றும் விரும்பும் வலயத்தினை தெரிவு செய்யும் தகவல்களை உள்ளடக்கலாம
    • 4.9. பின்னர் Download Icon Click செய்து PDF கோவையாக பதிவிறக்கம் செய்யவும். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF கோவையை அச்சிட்டு முறையாக தரவுகள் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை உங்களது நிறுவனத் தலைவரினால் சான்றளிக்கப்பட்ட பின்னர் அதன் (Scan) செய்யப்பட்ட பிரதியை Graduates.app@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பம் கோரபப்படும் இறுதி திகதிக்கு அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கவும் (பதிவுத் தபாலில் அனுப்புவதை தவிர்க்கவும்)
    • 4.10. விண்ணப்பப்படிவத்தின் Scan செய்யப்பட்ட பிரதியை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் போது Subject இல் உங்களது பெயர் முதல் எழுத்தக்களுடன் ஆங்கிலத்தில் குறிப்பிடுவது கட்டாயமானதாகும்
    • 4.11. விண்ணப்பப்படிவத்தின் மூலப்பிரதியை நீங்கள் நேர்முகப் பரீட்சைக்கு வரும் தினத்தில் கொண்டுவருவது கட்டாயமானதாகும்
    • 4.12. விண்ணப்பங்கள் கோரப்படும் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவத்தில் திருத்தங்கள் இடம்பெறறிருந்தால் இறுதியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் (Scan) செய்யப்பட்ட பிரதியை மாத்திரம் மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
    • 4.13. விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதி திகதிக்கு பின்னர் விண்ணப்பப்படிவத்தில் உள்ளடக்கப்பட்ட தகவல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

5. உதவி தொலைபேசி இலக்கம் (Helpdesk)

    • 0112-784843/ 0112-785634 2020 ஆம் ஆண்டில் பயிற்சியாளர்களாக சிங்கள மொழிமூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகள்.
    • 0112-786749 – 2019ஆண்டில் பயிற்சியாளர்களாக சிங்கள மொழிமூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஆட்சேர்ப்புச்; செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் 2020,2019, 2018 ஆம் ஆண்டுகளில் பயிற்சியாளர்களாக தமிழ் மொழிமூலத்தில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள்
    • 0112-785258 – 2018; ஆண்டில் பயிற்சியாளர்களாக சிங்கள மொழிமூலம் ஆட்சேர்ப்புச செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் 2020,2019இ 2018 ஆண்டில் பயிற்சியாளர்களாக சிங்கள மொழிமூலத்தின் ஆட்சேர்ப்புச் செய்யப்பட டிப்ளோமாதாரர்கள்
Tamil Instruction PDFDownload

Official Link : https://dorec.moe.gov.lk/