Midwife Interview Postponed by Ministry of Health
குடும்ப நல உத்தியோகத்தர் (Public Health Midwife) கற்கைநெறிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகளை பிற்போடுவது சம்பந்தமாக சுகாதார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா (COVID 19) அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.