Ordering School Text Books Online Tamil Instructions
1. 2022 ஆம் ஆண்டிற்காகப் பாடசாலை மட்டத்தில் பாடநூல்கள் தேவையைப் பெற்றுக்கொள்வதை கணினி ஊடாக இயங்கலை (Online) முறையில் மேற்கொள்வதற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எனவே கீழ்வரும் விதந்துரைகளை உரிய முறையில் கவனத்தில் எடுத்து உங்கள் பாடசாலைக்கான பாடநூல் தேவைகளைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தயவாய் வேண்டுகிறேன்.
2. அதற்காக நீங்கள் கீழ்வரும் படிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
- i. இங்கு கீழே இலக்கம் 3 இல் காணப்படும் விதந்துரைக்கிணங்க பாடநூல்களைக் கோரும் படிவத்தைத் தரவிறக்கம் செய்து பாடசாலையின் தேவையின் அடிப்படையில் அச்சுப் பிரதியை பெற்றுக்கொள்ளல்.
- ii. பாடசாலைப் பாடநூல் தேவைகளைக் கருத்திலெடுத்து, வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கிணங்க அக்கோரல் படிவத்தைப் பூரணப்படுத்தல்.
- iii. அக்கோரல் படிவத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளை கணினி மயப்படுத்தி உரிய ஆண்டிற்கான பாடநூல்களைக் கோருதல்.
3. பாடநூல் கோரலுக்குரிய படிவத்தைத்தரவிறக்கம் செய்தல்.
- 2022 ஆம் ஆண்டிற்கான பாடநூல் கோரல் படிவங்களை மேலே காட்டப்பட்டுள்ள Form – Download மூலம் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இக்கோரல் படிவமானது Form A ஆரம்பப் பிரிவு வகுப்புகளுக்காகவும் (1 – 5) Form B இடை நிலைப் பிரிவு வகுப்புகளுக்காகவும் (6 – 11) Form C GE உயர் தரம் 12 தரத்துக்கான சாதாரண ஆங்கிலம் (General English) நூல்களுக்காகவுமாக வடிவமாக்கப்பட்டுள்ளது. Form – A ஆனது சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல வகுப்புகளுக்காக அவ்விரு மொழிகளிளும் Form – B ஆனது சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல வகுப்புகளுக்காக அம் மூன்றுமொழிகளிளும் வேறுவேறாகஅமைக்கப்பட்டுள்ளது. Form – C GE ஆனதுமொழி மூல வித்தியாசமின்றி 12 ஆம் தர General English நூல்களின் தேவையைக் காட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வகுப்பு வரையறை மற்றும் கற்பிக்கப்படும் மொழி மூலங்களுக்கமைவாக தரவிரக்கம் செய்யக்கூடிய படிவங்கள் கீழ்வரும் III பகுதியில் அட்டவணையில் காட்டப்படுகின்றன. பாடசாலைக்குத் தேவையான படிவத்தை இரண்டு பிரதிகளாகப் பூரணப்படுத்தி அதிபரின் மூலம் உறுதிப்படுத்தி ஒரு பிரதியைப் பாடசாலையில் வைத்துக்கொண்டு மற்றைய பிரதியை வலயக் கல்விக் காரியாலயத்தில் பாடநூல்களுக்குப் பொறுப்பானஅதிகாரியிடத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
- சாதாரண பாடசாலைப் பாடத்திட்டத்தைக் கற்பிக்கின்ற பிரிவெனாக்களின் பிரிவெனா அதிகாரிகள் மூலம் மேலே I இல் காட்டப்பட்டுள்ளவாறு தமது பிரிவெனாக்களில் நடாத்தப்படுகின்ற வகுப்புகளுக்குரியதான A, B, C GE படிவங்களைத் தரவிறக்கம் செய்து தேவையான நூல்களைப் பூரணப்படுத்தி இணைய வழியூடாகக் கோர முடியும். பிரிவெனாப் பாடத் திட்டத்திற்கான நூல்களைக் கோருவதற்கான அச்ச்சிடப்பட்ட படிவங்கள் சகல பிரிவெனாக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
- பூரணப்படுத்தவேண்டிய படிவம்
பாடசாலை வகுப்புக்கள் | பூரணப்படுத்தவேண்டிய படிவம் |
---|---|
1 – 5 மட்டும் | Form A-Sinhala (சிங்கள மொழி மூல வகுப்புகளுக்காக) Form A-Tamil (தமிழ் மொழி மூல வகுப்புகளுக்காக) |
1 – 11 | Form A-Sinhala ( 1-5 சிங்கள மொழி மூல வகுப்புகளுக்காக) Form A-Tamil ( 1-5 தமிழ் மொழி மூல வகுப்புகளுக்காக) |
Form B-Sinhala ( 6-11சிங்கள மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-Tamil ( 6-11 தமிழ் மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-English ( 6-11 ஆங்கில மொழி மூல வகுப்புகளுக்காக)1 – 13Form A-Sinhala ( 1-5 சிங்கள மொழி மூல வகுப்புகளுக்காக)
Form A-Tamil ( 1-5 தமிழ் மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-Sinhala ( 6-11சிங்கள மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-Tamil ( 6-11 தமிழ் மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-English ( 6-11 ஆங்கில மொழி மூல வகுப்புகளுக்காக)
Form C-GE ( 12 ஆம் தர General English பாடநூல் தேவைகளுக்காக சிங்கள/தமிழ் ஆகிய இரண்டுக்கும் ‘பொதுவான படிவமாகும்)6 – 11Form B-Sinhala ( 6-11சிங்கள மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-Tamil ( 6-11 தமிழ் மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-English ( 6-11 ஆங்கில மொழி மூல வகுப்புகளுக்காக)6 – 13Form B-Sinhala ( 6-11சிங்கள மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-Tamil ( 6-11 தமிழ் மொழி மூல வகுப்புகளுக்காக)
Form B-English ( 6-11 ஆங்கில மொழி மூல வகுப்புகளுக்காக)
Form C-GE ( 12 ஆம் தர General English பாடநூல் தேவைகளுக்காக சிங்கள/தமிழ் ஆகிய இரண்டுக்கும் ‘பொதுவான படிவமாகும்)12 – 13Form C-GE ( 12 ஆம் தர General English பாடநூல் தேவைகளுக்காக சிங்கள/தமிழ் ஆகிய இரண்டுக்கும் ‘பொதுவான படிவமாகும்
4. கோரல் படிவத்தைப் பூரணப்படுத்தல்
- ஆரம்பப் பிரிவை மட்டும் கொண்டுள்ள பாடசாலைகள் தமது பாடசாலையில் கற்பிக்கப்படுகின்ற மொழிமூல/ மொழி மூலங்களுக்குரிய Form A ஐப் பூரணப்படுத்துவது போதுமானதாகும். இப் பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் 1 – 5 வரையான பாடநூல்களுக்கு மேலதிகமாக 2022 இல் தரம் 6 க்கும் செல்கின்ற தமது பாடலை மாணவர்களுக்கு அவசியமான பாடநூல் தேவைகளையும் (சிங்கள மொழி மூலம் அல்லது தமிழ்மொழி மூலம் மட்டும்) குறிப்பிடல் வேண்டும்.
- 1-13 , 6 – 11, 6 – 13 வகுப்புகளைக்கொண்ட பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலைகளின் 6 – 11 தரங்களுக்கான பாடநூல் தேவைகளைத் தமது பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற மொழி மூலம் /மொழி மூலங்களுக்குரியதான Form B இல் குறிப்பிடல் வேண்டும்.
- 6 – 11, 6 – 13 வகுப்பு வரையறைகளையுடைய பாடசாலைகள் தரம் 6 க்கான பாடங்கள் ஆங்கில மொழிமூலத்தில் கற்பிக்கப்படுவதாக இருந்தால் 2022 ஆம் ஆண்டில் அப்பாடங்களுக்குத் தேவைப்படலாம் என எதிர்பார்க்கின்ற ஆங்கில மொழி மூலப் பாடநூல்களின் அளவைக் கணக்கிட்டு Form B ஆங்கிலப் படிவத்தை நிரப்புதல் வேண்டும். தரம் 5 இல் சித்தியடைந்து இப்பாடசாலைக்கு வெளியே இருந்து வருகின்ற மாணவர்கள் தமது ஆரம்ப பாடசாலையிலிருந்து தரம் 6 க்குத் தேவையான சிங்கள / தமிழ்மொழி நூல்களை எடுத்துவருவதனால் அவர்களுக்காக சிங்கள / தமிழ்மொழி நூல்களின் தேவைகளை உள்வாங்குதல் கூடாது.
- உயர்தர 12 ஆம் வகுப்புடன்கூடிய பாடசாலை அதிபர்கள் 12 ஆம் தர மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சாதாரண ஆங்கில நூல்களின் தேவையை Form – C GE படிவத்தில் குறிப்பிடல் வேண்டும்.
- 1, 2, 3, 4, 5 தரங்களுக்கு மீள்பாவனையைக் கருத்திற்கொள்ளாது மொத்த மாணவர் தொகைக்குமாக புதிதாக நூல்களைக் கோருதல் வேண்டும். தற்போது பாடசாலைகளுக்குக்கிடைத்து விநியோகிக்கப்படாது எஞ்சியுள்ள நூல்கள் இருப்பின் அவை கழிக்கப்பட்டே 2022 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடநூல்கள்கணக்கெடுக்கப்படல் வேண்டும்.
- 10, 11 ஆம் தரங்களுக்கும் மீள் பாவனையைக் கருத்திற்கொள்ளாது முழு மாணவர் தொகைக்குமாகப் புதிதாக பாடநூல்களைக் கோரல் வேண்டும். தற்போது பாடசாலைக்குக் கிடைத்து விநியோகிக்காது எஞ்சியுள்ள பாடநூல்கள் இருப்பின் அவை கழிக்கப்பட்டே 2022 ஆம் ஆண்டுக்கான பாடநூல்களைக்கணகெடுத்தல் வேண்டும்.
- சகல செயல் நூல்களும் உரிய வகுப்புகளின்மொத்த மாணவர் தொகைக்குமாகக் கணக்கெடுக்கப்படல் வேண்டும்.
- சில பாடநூல்கள் பல்வேறு தொகுதிகளாக அச்சிடப்படுகின்றன. அவ்வாறான பாடநூல்களின்அனைத்து தொகுதிகளினதும் தேவை வேறு வேறாகக் கணக்கெடுக்கப்படல் வேண்டும்.
- உங்களால் கோரப்படுகின்ற பாடநூல்களின் தொகை உங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு மட்டுமான தாகவே இருத்தல் வேண்டும். உங்களால் முன்வைக்கப்படும் தொகை படசாலைக் கணக்கெடுப்பு விபரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
- ஒவ்வொரு வகுப்புக்குமான பாடநூல் தேவைகளைக் கணக்கெடுக்கும் போது சிங்களம் / தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்றுமொழி மூலங்களிளும் ஒரு பாடத்துக்குக் கோருகின்ற நூல்களின் அளவின் மொத்தத் தொகை அந்த வகுப்பிலுள்ள மொத்த மாணவர் தொகைக்குச் சமனானதாக இருத்தல் வேண்டும்.
- 2020.09.28 ஆம் திகதி 27 / 2020 இலக்க சுற்று நிருபத்திற்கிணங்க 6-9 வகுப்புகளுக்கான பாடநுல்களில் மீள் பாவனைதொடர்பில் கவனம் செலுத்தல் வேண்டும்.
05. அக்கோரல் படிவத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளைக் கணினி மயப்படுத்தி உரிய வருடத்திற்கான பாடநூல்களைக் கோருதல்
- பாடநூல்களின் தரவுகளை கணினி மயப்படுத்தும் பொருட்டு சகல பாடசாலைகளுக்கும் வேறுவேறான Username மற்றும் Password களை வலயக் கல்விக் காரியாலயங்களில் பாடநூல் இணைப்பாக்க அதிகாரி மூலம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழங்கப்பட்டுள்ள Username மற்றும் Password களை மாற்றி புதிய Username மற்றும் Password களை ஆக்கிக் கொள்வதற்கு நீங்கள் ஆளாவதுடன்அதன் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பது அதிபரின்பொறுப்பாகும். Username மற்றும் Password களைப் பயன்படுத்தும் பொறுப்பை பிரதி அதிபர் /உதவி அதிபர் /பாடநூல்களுக்குப் பொறுப்பானஆசிரியர் போன்றோரிடம் ஒப்படைக்க முடியும்.
- புதிதாக ஆரம்பித்ததன் காரணமாக அல்லது வேறு காரணங்களினால் பாடசாலைக்குத் தரவுகளைக் கணினி மயப்படுத்தும் பொருட்டு Username மற்றும் Password கள் கிடைக்காதிருப்பின் வலயக் கல்வி காரியாலயத்தின் பாடநூல்கள் இணைப்பாக்க அதிகாரிகள் மூலம் கீழே இலக்கம் III இல் காணப்படும் தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பதன் மூலம் புதிய Username மற்றும் Password களைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
- பாடநூல்களை கோரும்போது அந்தஅதிபரின் அல்லது பாடநூல்களுக்குப் பொறுப்பான ஆசிரியரின் விபரங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படின் எமதுதொலை நகல் இலக்கம் 0112785306 அல்லது epd.distribution@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அதுதொடர்பில் அறிவித்தல் வேண்டும்.
- பூரணப்படுத்தப்பட்ட படிவத்தில் நான்காம் நிரலில் (தேவைப்படும் மொத்த நூல்களின் தொகை) காணப்படும் தரவுகளை மாத்திரம் கணினி மயப்படுத்துதல் வேண்டும். பூரணப்படுத்தப்பட்ட படிவங்களில் பிழையற்ற தன்மையை அதிபர்/ பிரதி அதிபர்/ உப அதிபர் மூலம் அல்லது சிரேஷ்ட ஆசிரியரொருவர் மூலம் பரிசிலித்து உறுதிப்படுத்தல் வேண்டும்.
கவனிக்கவும்- மேலுள்ள படிவத்தைப் பிழையின்றி பூரணப்படுத்தும் போது
(நிரல் i) – (நிரல் ii) + (நிரல் iii) = (நிரல் iv) என்னும் விதத்தில் தொகைகள் சமனானதாக இருத்தல் வேண்டும்.
- 2021.10.11 ஆம் திகதி முதல் 2021.10.31திகதிவரை உங்கள் பாடநூல் தேவைகளை கணினி மயப்படுத்த முடிவதுடன்அக்கால எல்லைக்குள் உங்கள் தரவுகளை திருத்துவதற்குஅவகாசம் தரப்படும்.
- படிவங்களைப் பெற்றுக்கொள்ளல்அல்லது கோரல் விபரங்களை கணினி மயப்படுத்துவதற்கான வசதி இல்லாத பாடசாலைகளுக்காக வலயக் கல்வி காரியாலயத்தின் மூலம் அல்லது வலயக் கணினி வள நிலையம் மூலம் அந்த வசதிகளைச் செய்து தருவதற்கு வலயக் கல்வி காரியாலயத்தின் பாடநூல்கள் இணைப்பாக்கப் பொறுப்பதிகாரி மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
- 2022 ஆண்டுக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடநூல்களை வெற்றிகரமாக விநியோகிப்பதற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களமானது உங்கள் சகலரினதும் உதவி ஒத்தாசைகளை எதிர்பார்க்கின்றது.
கல்வி வெளியீட்டுஆணையாளர் நாயகம்
Download Tamil Instructions |