Swami Vipulananda Institute of Aesthetic Studies Aptitude Test Application 2024

Swami Vipulananda Institute of Aesthetic Studies Aptitude Test Application 2024

Swami Vipulananda Institute of Aesthetic Studies Aptitude Test Application 2024

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்இலங்கை.

 நுண்கலை சிறப்புமாணி (சங்கீதம் / நடனம் / நாடகமும் அரங்கியலும் / கட்புல தொழில்நுட்பக் கலைகள்பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில பட்டப்படிப்பு கற்கை நெறிகளை பயில்வதற்கு பல்கலைக்கழக அனுமதிக்குரிய குறைந்தபட்ச தகைமைகளைக் கொண்டுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அனுமதிக்கான குறைந்தபட்ச தகமைகள்

2023 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். (2023/2024 பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கைநூலைப் பார்க்கவும்,) அத்தோடு தாம் தெரிவு செய்த பாடத்தில் குறைந்தபட்சம் திறமைச்சித்தியும் (C) ஏனைய இரண்டு பாடங்களில் குறைந்தபட்சம் சாதாரண சித்தியும் (S) பெற்றிருத்தல் வேண்டும்.

பரீட்சை மொழி

செய்முறைத்திறன்காண் பரீட்சைகள் அனைத்தும் தமிழ்மொழி மூலம் மட்டுமே நடாத்தப்படும். (2023/2024 பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கைநூலைப் பார்க்கவும்)

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

விண்ணப்பதாரிகள் கீழே இணைக்கப்பட்ட Online விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து Online மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பப்படிவத்தின் பிரிவு 6 ல் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் Scan செய்து Online  மூலம் எதிர்வரும் 02.08.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் Online விண்ணப்பப்படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். தொழிநுட்ப உதவிக்காக திரு. S. Ketheeswaran அவர்களை 0777883229 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக வேலை நாட்களில் 9.00மு.ப – 4.00பி.ப வரை தொடர்பு கொள்ள முடியும்.

Online மூலம் விண்ணப்பித்ததன் பின்னர் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின்  அச்சுப்பிரதியைப் பெற்று அதில் விண்ணப்பதாரிகள் ஒப்பமிட வேண்டும்.  இவ்வாறு ஒப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பிரிவு 6 ல் குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களின் மூலப்பிரதிகளை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பரீட்சைகள் பகுதியில் சிரேஷ்ட உதவிப் பதிவாளரிடம் பரீட்சைக்குச் சமூகமளிக்கும் தினத்தன்று சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பப் படிவத்தின் பிரிவு 6(1) க்கான அறிவித்தல்

சங்கீதம், நடனம் மற்றும் நாடகமும் அரங்கியலும் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பதாரிகள் ரூபா. 1000/- ஐயும் மற்றும் கட்புலத் தொழில்நுட்பக் கலைகள் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பதாரிகள் ரூபா. 1500/- ஐயும் பரீட்சைக் கட்டணமாக செலுத்திய பற்றுச்சீட்டினை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவேண்டும். இக்கொடுப்பனவு “உதவி நிதியாளர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை” என்ற பெயருக்கு வங்கிக் கணக்கிலக்கம் 075-100110000-767 மக்கள் வங்கிஇ மட்டக்களப்புக் கிளைக்கு வைப்புச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.



விண்ணப்பப் படிவத்தின் பிரிவு 6(2) க்கான அறிவித்தல்

க.பொ.த (உ/த) பரீட்சைச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்பிரதிகள் விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும். இவை பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவான் அல்லது கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.



விண்ணப்பப் படிவத்தின் பிரிவு 6(3) க்கான அறிவித்தல்

விண்ணப்பப்படிவத்திலும் கல்விச்சான்றிதழ்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் ஏதாவது வேறுபாடு காணப்படுமானால் இவை இரண்டும் ஒரே நபரைக் குறிக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் உறுதிமொழியும் இணைக்கப்படுதல் வேண்டும்.


பிரவேச அனுமதித் தகைமைகளைப் பூர்த்தி செய்த பரீட்சார்த்திகளுக்கு செய்முறை பரீட்சை நடைபெறும் திகதி மின்னஞ்சல் (E-mail) மூலம் அறிவிக்கப்படும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு தேவையான மிகக் குறைந்த தகைமைகளை கொண்டிராத அல்லது உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ/த) சான்றிதழ்கள் இணைக்கப்படாத அல்லது கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு இணைக்கப்படாத அல்லது குறித்த திகதிக்குப் பிந்தி கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்;.

சிரேஷ்ட உதவிப் பதிவாளர்

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்கிழக்குப் பல்கலைக்கழகம்,

கல்லடிமட்டக்களப்பு.

 Application Form: https://forms.gle/LRStFPEyUhmyg4K1A

Notice – EnglishDownload
Pay in VoucherDownload
ApplicationApply Online
Closing Date2024.08.02

Swami Vipulananda Institute of Aesthetic Studies Aptitude Test Application 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *