Appeals on University Admission 2020/2021

Appeals on University Admission 2021

Appeals on University Admission 2020/2021

மேன்முறையீடு செய்யும் முறை

2020/2021 ஆம் கல்வி ஆண்டின் சாதாரண அனுமதியின் கீழ் பரீட்சார்த்திகளின் தெரிவு பூரணப்படுத்தப்பட்டதன் பின்னர் சாதாரண அனுமதி சம்பந்தமாக பரீட்சார்த்திகளால் செய்யப்படும் மேன்முறையீடுகளை ஆராய்ந்து அறிக்கையிட ஒரு மேன்முறையீட்டுக் குழுவை ப.மா.ஆ. நியமிக்கும். மேன்முறையீடுகள் பின்வருவோரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படும்.

(அ) பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலின் 03 ஆம் பகுதியின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிக்கு தெரிவுக்கென பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைப்பாடுகள் ” பூர்த்தி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட ஆகக்குறைந்த ‘Z’ புள்ளிகளைக் கொண்டிருந்தும் தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரிகள்.

(ஆ) பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலின் பகுதி 03 இன் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைப்பாடுகளை ”ர்த்தி செய்து ஒரு குறித்த கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுää ஆனால் தாம் குறிப்பிட்ட வேறொரு கற்கை நெறிக்குத் தகுதியுடையவர்களெனக் கருதும் விண்ணப்பதாரிகள்.

(இ) அனுமதிக்கான தேவைப்பாடுகள் நிறைவேற்றியிருந்தால் தமது கற்கை நெறியை விண்ணப்பத்தில் குறைந்த விருப்புரிமையாக குறிப்பிட்ட இன்னொரு கற்கை நெறிக்கு மாற்றுவதற்கு கோரிக்கை விடுக்கும் விண்ணப்பதாரிகள். (கற்கை நெறியின் மாற்றமொன்றுக்கான மேன்முறையீடுகளை கரிசனைக்கு எடுக்க வேண்டுமாயின், குறிப்பிட்ட கற்கை நெறியில் வெற்றிடங்கள் இருக்க வேண்டும். வெற்றிடங்களை விட அதிகளவு விண்ணப்பதாரிகள் இருந்தால் மாணவர்களின் Z புள்ளி ஒழுங்கு கரிசனைக்கு எடுக்கப்படும்.)

(ஈ) குறித்த கற்கைநெறிக்கு விண்ணப்பிக்காத, அந்த கற்கைநெறிக்கான அனுமதிக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள். (இந்தப் பிரிவில் மேன்முறையீடுகளை கரிசனைக்கு எடுக்கவேண்டுமாயின் சம்பந்தப்பட்ட கற்கை நெறியில் வெற்றிடம் இருக்க வேண்டும். வெற்றிடங்களை விட அதிகளவு மேன்முறையீட்டாளர்கள் இருந்தால் மாணவர்களின் ணுபுள்ளி ஒழுங்கு கரிசனைக்கு எடுக்கப்படும்.)

மேன் முறையீட்டுக்குழ பின்வருவன தொடர்பாக செய்யப்படும் மேன்முறையீடுகளைக் கருத்திற்கொள்ளாது என்பதுடன், அத்தகைய மேன்முறையீட்டாளர்களுக்கு மேன்முறையீடு கிடைத்தமை பற்றி அறிவிக்கப்படமாட்டாது எனவும், கொடுப்பனவுகள் மீளளிக்கப்படமாட்டாது எனவும் இத்தால் அறிவிக்கிறது..

i. விசேட ஏற்பாடுகளின் கீழ் அனுமதி.
ii. மேலதிக அனுமதியின் கீழ் விசேட பாடங்களுக்கான அனுமதி.
iii. வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி.

மேன்முறையீடு செய்ய விரும்புவோர் பல்கலைக்கழக அனுமதிக்கான பகுதி 10 இல் இணைப்பு-ஐ வழங்கப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, வெட்டுப்புள்ளி (வெ.பு) பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு (4) வாரங்களுக்குள் எழுத்தில்,;

Senior Assistant Secretary,
Appeals Committee on University Admissions,
C/o University Grants Commission,
No. 20, Ward Place,
Colombo 07 

என்ற முகவரியை  அடையத்தக்கதாகப் பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “Appeals – University Admissions” என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மேன்முறையீட்டிற்கும் ரூபா 500ஃ- கொடுப்பனவு செய்யப்பட வேண்டும். ப.மா.ஆ.விற்கு பணம் செலுத்துவதற்கான கொடுப்பனவுப் பட்டோலையை நிரப்பிää இலங்கை வங்கியின் அல்லது மக்கள் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் இலங்கை வங்கியின் சுதந்திரச் சதுக்க கிளையிலுள்ள ப.மா.ஆ. திரட்டுக் கணக்கு இலக்கம் 0002323287இன் அல்லது மக்கள் வங்கியின் நகர மண்டபக் கிளையிலுள்ள திரட்டுக் கணக்கு இலக்கம் 167-1-001-4-3169407இன் வரவிற்கு இக்கொடுப்பனவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மேன்முறையீட்டுடனும் மேற்கூறிய வங்கிகளில் ஒன்றின் இலச்சினை பொறிக்கப்பட்டு அதிகாரமுடைய அலுவலர் ஒருவரினால் ஒப்பமிடப்பட்ட கொடுப்பனவு பட்டோலையின் அடிக்கட்டை இணைக்கப்பட வேண்டும். இப்பணம் செலுத்தப்படாத எந்த மேன்முறையீடும் ஏற்றுக்கொள்ளப் படவோ பதிலழிக்கப்படவோ மாட்டாது. மேலும், பூரணப்படுத்தப்படாத தெளிவற்ற மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும்.

தொலைநகல் (Fax), மின்னஞ்சல் ((E-mail) மூலமாக செய்யப்படும் மேன்முறையீடுகள் கருத்தில்
கொள்ளப்பட்கொள்ளப்படமாட்டாது.

மேன்முறையீட்டு படிவங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் (www.ugc.ac.lk/) கிடைக்கப்பெறும்.

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மேன்முறையீட்டை அனுப்ப விரும்பினால்இ நீங்கள் மேன்முறையீட்டிற்கான படிவத்தின் பிரதியைப் (Phழவழஉழில) பயன்படுத்தலாம். (Appeals on University Admission 2020/2021)

Z-Score Released Date:29.10.2021
Appeals Closing Date26.11.2021
Appeal Application FormDownload

View More: University Admission Cut Off 2020/2021

One Comment on “Appeals on University Admission 2020/2021”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *