Diploma in Early Childhood Development and Pre-School Education 2021 Eastern University, Sri Lanka

Diploma in Early Childhood Development and Pre School Education 2021 Deadline Extended

Diploma in Early Childhood Development and Pre-School Education 2021, Eastern University, Sri Lanka

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா – 2020/2021
Diploma in Early Childhood Development and Pre-School Education – 2020/2021 (SLQF L3)
கிழக்குப் கல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்காக கல்வியாண்டு 2020/2021 இற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.
தகைமைகள்
    • க.பொ.த உயர்தரத்தில் (SLQF L2) சித்தியடைந்திருப்பதுடன், 120 மணித்தியாலங்களுக்கு குறையாத முன்பிள்ளைப் பருவஃ முன்பள்ளி பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

  • க.பொ.த சாதாரண தரத்தில் (SLQF L1) சித்தியடைந்திருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக்கல்வி சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • பாடநெறிக் காலம் : 12 மாதங்கள்
  • மொழி மூலம் : தமிழ்
  • கட்டணம் : ரூபா. 35, 000.00

பாடநெறி உள்ளடக்கங்கள்

1. முன்பிள்ளைப்பருவ விருத்திக் கோட்பாடுகள்
2. நலமான இளம் பிள்ளை
3. படைப்பாற்றலுள்ள இளம் பிள்ளை
4. முன்பள்ளிப்பிள்ளையின் நடத்தையை விளங்கிக்கொள்ளல்
5. சமாதானம், இசைவு, முரண்பாட்டுத்தீர்வு
6. ஒத்தாசையான கற்றல் முகாமை
7. அறிவாற்றல் விருத்தி
8. கற்றலை வலுவூட்டும் முன்பள்ளிகள்
9. கற்பித்தல் பயிற்சியும் கற்பித்தல் துணைக்காதனங்களும்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் கீழே உள்ள Apply Online எனும் இணைப்பின் மூலம் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் Scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

அத்துடன் விண்ணப்பதாரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பி இதனுடன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நிழல் பிரதியுடன், பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்து சுயவிலாசம் இடப்பட்ட ரூபா 45/= பெறுமதி உள்ள முத்திரை ஒட்டப்பட்டதுமான கடித உறை ஒன்றையும்

உதவிப்பதிவாளர், வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி

எனும் விலாசத்திற்கு முடிவுத் திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா – 2020/2021” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்.

விண்ணப்ப முடிவுத்திகதி : 18.10.2022

மேலதிக தகவலுக்கு
உதவிப்பதிவாளர்,
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம்,

TP: 0652240972
Email: cedecinfo@esn.ac.lk
Web: www.cedec.esn.ac.lk

Recent Course: Short Course in the English Language for Officers University of Jaffa

AdvertisementDownload
Pay in VoucherDownload
GuideDownload
ApplicationApply Online
Closing Date18.10.2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *