Jaffna University BBM External Degree 2023
வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2021/2022 (பிரிவு – XIII)
புதிய அனுமதிக்கான தெரிவு – 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள் :
க.பொ.த. (உ/த) பரீட்சை – 2020 அல்லது அதற்கு முன்னர் எப்பாடப் பிரிவில் இருந்தாயினும் சித்தியடைந்திருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்
விண்ணப்பப்படிவங்களைப் பெறுதல் :
யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் விண்ணப்பப்படிவத்தினை அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். (காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.15 மணி வரை)
அல்லது
www.codl.jfn.ac.lk எனும் இணைய முகவரியில் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
விண்ணப்ப மற்றும் பரீட்சைக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 050132150001410 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பற்றுச்சீட்டினை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பித்தல்:
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவங்கள் நேரடியாக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கலாம்.
அல்லது உதவிப் பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க முடியும்.
தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் “வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2021/2022” என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும். முக்கிய குறிப்பு : விண்ணப்பப்படிவத்துடன் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழின் பிரதியினையும் இணைத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத்திகதி : 31.05.2023 (புதன்கிழமை)
(விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
மேலதிக விபரங்களுக்கு : 𝟬𝟮𝟭 𝟮𝟮𝟮 𝟯𝟲𝟭𝟮 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.
Jaffna University BBM External Degree
Notice – Tamil | Download |
Application | Download |
Closing Date | 2023.05.31 |
Jaffna University BBM External Degree 2023