Bachelor of Business Management (BBM) External Degree 2021 – Eastern University, Sri Lanka

Bachelor of Business Management (BBM) External Degree 2021

Bachelor of Business Management (BBM) External Degree 2021 – Eastern University, Sri Lanka

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வியாபார முகாமைத்துவ இளமாணிப்பட்டம்
வெளிவாரிப்பட்டப்படிப்பு – 2021

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி கற்கை நெறியின் 2021ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன

அனுமதிக்கான தகைமைகள் :

    1. க.பொ.த (உ/த) வர்த்தகத்துறையில் சித்திபெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.

அல்லது

    1. க.பொ.த (உ/த) ஏதேனும் துறையில் சித்தி பெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.

அல்லது

    1. இதனுடன் தொடர்புபட்ட ஒரு தொழில்சார் தகைமையைப் பெற்றிருத்தல்**

அல்லது

  1. கிழக்குப் பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்படக் கூடிய ஏதேனும் கல்விசார்/ தொழில்சார்/ தொழிற் பயிற்சிசார் தகைமையினைப் பெற்றிருத்தல்.

*குறிப்பு

  • – க.பொ.த (உ/த) பரீட்சைக்கு 2019ம் வருடம் அல்லது அதற்கு முந்திய வருடங்களில் தோற்றிய மாணவர்கள்.
  • – இலங்கை பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கு தகுதியான அதிகூடிய தகைமைகள்.:
      1. அனுமதிக்கப்பட்ட 03 பாடங்களிலும் கூடியது 03 அமர்வுகளுக்கு மேற்படாமல் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் ‘S’ தரச் சித்தியைப் பெற்றிருத்தல்.

    அத்துடன்

    1. பொதுச் சாதாரணப் பரீட்சையில் (Common General Test) குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்.

** மேலதிக தகவல்களை http://www.cedec.esn.ac.lk/bbm என்னும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தெரிவு நடைமுறைகள்:

அனுமதிக்கான தகைமைகளில் முதல் பிரிவிலுள்ளவர்களுக்கு (பிரிவு (a)) முன்னுரிமை வழங்கப்படும்.

பாடநெறிக்கான காலம் :

03 வருடங்கள்

மொழி மூலம் :  

தமிழ்

பாடநெறிக்கான கட்டணம் :

 

ரூ. 110,000.00
03 தவணைகளில் செலுத்தமுடியும்
(முறையே ரூ. 55,000.00, ரூ. 35,000.00, ரூ. 20,000.00).

விண்ணப்ப நடைமுறைகள்:  

விண்ணப்பப்படிவத்தினையும் ஏனைய தகவல்களையும் விண்ணப்பதாரிகள் http://www.cedec.esn.ac.lk/bbm எனும் இணையத்தளத்தில் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரிகள் இணையத்தளத்தினூடாகவும் விண்ணப்பித்தல் கட்டாயமாகும்.

முடிவுத்திகதி :   24 th November 2021

மேலதிக விபரங்கள் :

உதவிப் பதிவாளர்
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.

தொ.இல: 065-2240972
மின்னஞ்சல்: arcedec@esn.ac.lk
இணையம்: http://www.cedec.esn.ac.lk/bbm

பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.
2021.10.24

Bachelor of Business Management (BBM) External Degree 2021

Paper Ad (English)Download
Paper Ad (Tamil)Download
Complete DetailsView Online
Closing Date24.11.2021
Online ApplicationApply Online

Also View: Northern Province Aquaculture Training Courses 2021 | Free Course

Bachelor of Business Management (BBM) External Degree 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *