Diploma in Agriculture 2021 Eastern University, Sri Lanka

Diploma in Agriculture 2021 Eastern University

Diploma in Agriculture 2021, Eastern University, Sri Lanka

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்

கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் விவசாய டிப்ளோமா கற்கை நெறிக்காக கல்வியாண்டு 2020/2021 இற்கான விண்ணப்பங்கள் வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தினால் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

தகமைகள்

    • கா.பொ.த (உயர்தரப்) பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் கா.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் விவசாயம் அல்லது விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது

    • NVQ தரம் 4 விவசாய பாடநெறி ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது

  • ஒரே அமர்வில் விவசாயம் அல்லது விஞ்ஞான பாடம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது 06 பாடங்களில் கா.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன், விவசாயம் சார்ந்த அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடங்கள் தொழில் அனுபவத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். 
  • காலம் : ஒரு வருடம் (வார இறுதி நாட்களில்)
  • கற்பித்தல் மொழி : தமிழ்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரிகள் கீழுள்ள நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும், நிதியாளருக்கு விலாசமிடப்பட்டு மக்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் ரூபா 1000/= பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பல்கலைக்கழக பிரதியையும் scan செய்து மேற்கூறிய வலைத்தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

பணம் வைப்பிலிடவேண்டிய கணக்கிலக்கம் 227-1-001-9-0000-390, மக்கள் வங்கி, செங்கலடி கிளை.

அத்துடன் விண்ணப்பதாரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பி இதனுடன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நிழல் பிரதியுடன், பணம் வைப்பிலிட்ட பற்றுச் சீட்டின் பல்கலைக்கழக பிரதியினையும் இணைத்து சுயவிலாசம் இடப்பட்ட ரூபா 45/= பெறுமதி உள்ள முத்திரை ஒட்டப்பட்டதுமான கடித உறை ஒன்றையும்

உதவிப்பதிவாளர்,
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்கு பல்கலைக்கழகம்,
இலங்கை,
வந்தாறுமூலை,
செங்கலடி

எனும் விலாசத்திற்கு 05.01.2022 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

மேலும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “விவசாய டிப்ளோமா கற்கை நெறி – 2020/2021” என்பதை குறிப்பிடுதல் வேண்டும்.

TP : 0652240972
Email  : cedecinfo@esn.ac.lk
Web : www.cedec.esn.ac.lk

Advertisement Download
Pay in Voucher Download
Guide Download
Application Apply Online
Closing Date 05.01.2022

Diploma in Agriculture 2021, Eastern University, Sri Lanka

More Course: Diploma in Early Childhood Development and Pre-School Education 2021 Eastern University, Sri Lanka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *